கொவிட்19 தடுப்பூசிகள் ஏற்றும் பணி தற்போது இடம் பெற்று வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முகமாக பொது மக்களுக்கும் முதற்கட்டமாக முதலாவது சைனோபாம் டோஸ் ஏற்றப்படுகிறது.
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள முதியோர்களுக்காக இன்று (08)தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு தம்பலகாமம் குளக்கோட்டன் பாடசாலையில் இடம் பெற்றது. தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் மலர்விழி ரவிந்திரராஜன் தலைமையில் இடம் பெற்ற குறித்த தடுப்பூசி ஏற்றல் நிகழ்வில் புதுக் குடியிருப்பு கிராம சேவகர் பகுதியை உள்ளடக்கிய 60 வயதுக்கு மேற்பட்டோர்களுக்காக சுமார் 155 நபர்களுக்கு ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்குரார்ப்பண நிகழ்வு இடம் பெற்றது.
தம்பலகாமம் சுகாதார பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் தெளுங்கு நகரில் அதிக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து முதற்கட்டமாக உரிய கிராம பிரிவுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எதிர் வரும் காலங்களில் சிராஜ் நகர்,முள்ளிப்பொத்தானை,கல்மெட்டியாவ போன்ற பகுதிகளுக்கும் சைனோ பாம் டோம் ஏற்றப்படும் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,நிருவாக உத்தியோகத்தர் உடகெதர மற்றும் பாதுகாப்பு படையினர்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment