கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊர்காவற்துறைக்கு விஜயம்



யாழ் லக்சன்-
டற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் ஊர்காவற்துறை தம்பாட்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

குறித்த விஜயத்தின் போது தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், தம்பாட்டி கடற்றொழிலாளர்களிடம் கடலுணவுகளை கொள்வனவு செய்யும் வர்த்தகர்களுக்கும் இடையில் கடற்றொழில் அமைச்சர் தலைமையில் ஊர்காவற்துறை பிரதேச செயலக மண்டபத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

தம்பாட்டி கிராமிய கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளமையினால், குறித்த சங்கத்தினை புனரமைப்பு செய்து புதிய நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் புதிய நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் கடலுணவு வர்த்தகர்களினால் குறித்த கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாக தெரிவுகளை தள்ளிப் போடுவது தொடர்பாக வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடியமையை சுட்டிக்காட்டியதுடன், புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் வரையில் கடலுணவு வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரின் மேற்பார்வையில் மேற்கொள்வது சிறந்தது என்ற கருத்தை முன்வைத்தார்.

குறித்த கருத்து சம்மந்தப்பட்ட தரப்புக்களினால் ஏற்றுக்கொண்டுள்ளது.
இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ் தீவகத்திற்கான நிர்வாக அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வேலும்மயிலும் குகேந்திரன் (ஜெகன்) மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி, ஊர்காவற்துறை பிரதேச சபை தலைவர் ஜெயகாந்தன் உட்பட சம்மந்தப்பட்ட துறை சார் அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :