றிஸ்லி முஸ்தபாவின் கல்முனை மெரைன் ட்ரைவ் வீதி அபிவிருத்தி திட்டம்



றிஸ்லி முஸ்தபாவின் கல்முனை மெரைன் ட்ரைவ் வீதி அபிவிருத்தி திட்டம்; நிந்தவூர் தொடக்கம் நீலாவணை வரையிலான பொது போக்குவரத்து பஸ்ஸுக்கு ஏற்பாடு!
கலீல் எஸ் முஹம்மட்-
ல்முனை மெரைன் ட்ரைவ் வீதி அபிவிருத்தி திட்டத்தின் அடுத்த கட்டமாக காரைதீவு தொடக்கம் நிந்தவூர் வரையிலான கடற்கரை வீதியை கார்பட் வீதியாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் றிஸ்லி முஸ்தபா தலைமையில் நாளை அரசியல் பிரமுகர்கள், அதிதிகளின் பங்கேற்புடன் நிந்தவூர் மண்ணில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அதேவேளை கல்முனை தொடக்கம் கல்முனை தமிழ் மற்றும் பாண்டிருப்பு கடற்கரை வீதி வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இவ்விரு திட்டங்களும் நிறைவு பெறும் போது நிந்தவூர் தொடக்கம் கல்முனை வரையிலான வீதி காபர்ட் வீதியாக பூர்த்தி செய்யப்பட்டு அனைத்து ஊர்களுக்குமான போக்குவரத்து நெரிசல் இன்றி இலகுபடுத்தப்படும்.
அத்துடன் நிந்தவூர் தொடக்கம் நீலாவணை வரை கல்முனை மெரைன் ட்ரைவ் வீதியில் அரச பஸ் போக்குவரத்து சேவைக்கான ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக றிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
இந்த பொதுப் போக்குவரத்து திட்டமானது சாய்ந்தமருதில் அமைந்துள்ள இளைஞர் மத்திய நிலையத்திற்கு (SLYC) மாணவர்கள் வந்து செல்வதில் இருந்த நீண்டகால குறைபாடு நிவர்த்திக்கப்படுவதோடு சாதாரண மீனவர்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் இந்த பஸ் போக்குவரத்து ஊடக முழுமையாக பயன்பெற முடியும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வீதி அபிவிருத்தி வேலைத்திட்டமும் பஸ் போக்குவரத்து சேவையும் கல்முனையில் சிதைந்து போயுள்ள தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான ஓர் உறவுப் பாலமாக அமையும் என்றும் றிஸ்லி முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :