சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று கூடவுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இந்த விசேட குழு கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 22ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதே வேளை, அரசாங்க நிதி பற்றிய குழு, இன்று முற்பகல் கூடவுள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்
அத்துடன், தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கும் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற குழு நாளை சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இன்று கூடவுள்ளது.
0 comments :
Post a Comment