ஒருவர் ஒரு அரசியல் கட்சி மூலம் மக்கள் மன்றத்துக்கு சென்று விட்டு அந்த அரசியல் கட்சி பிடிக்காவிட்டால் அக்கட்சி மூலம் தான் பெற்ற பதவியையும் ராஜினாமா செய்வதே நாகரிகமான அரசியலாகும்.
இத்தகைய நாகரிக அரசியல் மேலை நாடுகளில் இருந்தாலும் நமது நாட்டில் கொஞ்சமும் இல்லை. இதனை ரணில் விக்ரமசிங்க தனது முன்னைய அங்கத்தவர்களுக்கு பாடம் படிப்பித்துள்ளார்.
உண்மையில் இந்த உறுப்பினர்கள் ரணில் கேட்காமலேயே தமது உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால் அனுபவிப்பது ஒரு கட்சியினால் கிடைத்த பதவியில் ஆதரவளிப்பது இன்னொரு கட்சிக்கு என்ற நிலை மாற வேண்டும்.
அதே போல் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச்சின்னத்தில் கல்முனை மாநகர சபையில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் ராஜினாமா செய்வதே முறையாகும். அவர்கள் அனைவரும் கடந்த தேர்தலில் சஜித்துடன் நின்றவர்கள்.
ஐ தே கவுக்கும் மு. காவுக்கும் தேர்தல் புரிந்துணர்வு ஒப்பந்த இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதைக்கண்டவர் விண்டிலர். அப்படி இருந்தாலும் அவர்களுக்கெதிராக ஐ தே கவால் நடவடிக்கை எடுக்க இடமுண்டு.
ஆகவே ஐ தே க சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி பின்னர் ரணிலை எதிர்த்து சஜித்துடன் நிற்கும் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்வதே நாகரிக அரசியலாகும்.
முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சி
0 comments :
Post a Comment