ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு 'சினோபாம்" கொரோனா தடுப்புசி



ஏறாவூர் நிருபர் நாஸர்-
றாவூர் பிரதேச சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு 'சினோபாம்" கொரோனா தடுப்புசி செலுத்தும் பணிகள் இன்று 08.06.2021 ஆரம்பிக்கப்பட்டன.

அடுத்த மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் ää பிரதேச செயலகம் மற்றும் நகர சபை ஊழியர்களுக்கும் 08.06.2021 தடுப்பூசி ஏற்றப்பட்டது.

மட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோயியலாளர் குணராஜா ஜயசேகரன் ää பிரதேச சுகாதார வைத்தியாதிகாரி சாபிறா வசீம்ää பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த ஆகியோரின் கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்றன.

09.06.2021 மிச்நகர் மற்றும் ஏறாவூர்-3 பிரிவு ஆகிய பிரதேசங்களிலுள்ள 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும் 10.06.2021 மீராகேணி மற்றும் ஏறாவூர்- 3 பிரிவு ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கும் 11.06.2021 ஏறாவூர்- 2பி பிரதேசத்து வயோதிபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அரசாங்க அலுவலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :