கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை வெற்றி கொள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை எந்த ஒத்துழைப்பையும் முழுமையாக அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது என்று பேரவையின் தேசியத் தலைவர் சஹீட் எம். றிஸ்மி சாய்ந்தமருதில் தெரிவித்தார்.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடு சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. இன் அலுவலகத்தில் இடம்பெற்ற போது இவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் உரையாற்றிய அவர்,
இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொடூர கொரோனா எங்களையும் எங்களது அயல் நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
அந்த வகையிலே எங்களுடைய அரசாங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முப்படையினர், சுகாதார அதிகாரிகள் ஒன்றிணைந்து முதலாவது கொரோனா அலையை மிகவும் சிறப்பாக கட்டுப்படுத்தி உலகம் போற்றும் அளவுக்கு எங்களுடைய செயற்பாடுகள் அமைந்திருந்தது.
இதுபோன்று இரண்டாவது அலையும் எங்களால் முறியடிக்க முடியுமாக இருந்தது மக்கள் ஒத்துழைப்பின் ஊடாக,
மூன்றாவது அலை மிகவும் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே பிரயாணத் தடை ஊடாக இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.
மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்காமல் முழு நாட்டையும் முடக்காமல் செயற்பட்டுக் கொண்டு, மக்களின் உதவியை நாடி இருக்கின்ற இந்த வேளையிலே, இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு மூவாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கி அதனை 60 இலட்சம் குடும்பங்களுக்கு இப்பணம் வழங்கப்பட ஏற்பாடாகி இருக்கின்றது.
இந்த நிலையிலே இன, மத, பேதமின்றி, கட்சி பேதமின்றி மக்களாகிய நாங்கள் ஒத்துழைத்து இந்த கொரோனாவுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வர வேண்டும்.
அரசாங்கத்தின் உதவிகளை பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த நாடு கொரோனாவை வெற்றி கொண்ட நாடாக ஆக வேண்டும் என்பதுதான் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தற்போதய இலக்காகும்.
எனவே இதற்காக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை எந்த முயற்சியையும், எந்த ஒத்துழைப்பையும் முழுமையாக வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது என்பதை உறுதியாக கூறி வைக்க விரும்புகின்றோம் எனவும் கூறினார்.
0 comments :
Post a Comment