நிந்தவூரில் வீடு வீடாகச் சென்று பூஸ்டர் வழங்கி வைப்பு!



யாக்கூப் பஹாத்-
நாட்டில் ஏற்பட்டு இருக்கும் அசாதாரண சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கொவிட்-19 வைரசுக்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பூஸ்டர் மருந்து வகைகளை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வு நிந்தவூர் பிரதேசங்களில் இன்று இடம் பெற்றது.
கொவிட்-19 இன் தாக்கம் நிந்தவூர் பிரதேசம் மட்டும் அல்லாது முழு நாட்டிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனையிட்டு எமது நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களான DR.எம்.ஏ.நஸீல்(Ms),DR எம்.எஸ்.எம்.நஜீப்(MO),எம்.எப்.ரிஸ்மியா(CMO) ஆகியோரின் மூலமாக ஆயுர்வேத பூஸ்டர் மருந்து பொதிகள் இன்று மக்களுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கி வைக்கப்பட்டது.

அது மட்டுமல்லாது இக்கொடிய நோயான கொவிட்-19 இல் இருந்து நான் எவ்வாறு பாதுகாப்பு பெற வேண்டும்

*இதற்கு நான் உட்கொள்ளும் உணவு வகைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும்

*சுதேச மருத்துவத்துறை மூலமாக பாதுகாப்பு பெறுவது எவ்வாறு

*அவதானத்துக்குரிய பிரதேசங்களுக்கு சென்று வந்தால் நாம் எவ்வாறு இருந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும்

*அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாகவும் பல விடயங்களை மக்களுக்கு விழிப்புணர்வு மூலமாக தெளிவுபடுத்தினர்.

இதற்கு பொது மக்களாகிய நாமும் எம்மால் இயன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :