வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனம்



'இலங்கை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக'மாக செயல்பட்ட வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக கல்வியமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை கல்வி அமைச்சு நேற்று (08) திகதி வெளியிட்டுள்ளது.

'இலங்கை, யாழ்ப்பாணப் பலகலைக் கழகத்தின் வவுனியா வளாகம் எந்தக் கட்டளையின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டதோ மேற்கூறப்பட்ட சட்டத் தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்டு 1997 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 26 ஆந் திகதிய 968 / 6 ஆம் இலக்க அதிவிசேட வர்த் தமானியில் வெளியிடப்பட்ட அந்தக் கட்டளையை 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆந் திகதியிலிருந்து இத்தால்; இல்லாதொழிக்கின்றேன் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அந்த வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பல்கலைக்கழம் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம், தொழில்நுட்பவியல் கற்கை பீடங்களை இந்த பல்கலைக்கழம் கொண்டிருக்கும்.
வியாபார கற்கைகள் பீடத்தில் நிதி மற்றும் கணக்கியல் துறை, ஆங்கில மொழி கற்பித்தல்துறை, கருத்திட்ட முகாமைத்துவ துறை, மனிதவள முகாமைத்துவ துறை, சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறை, வியாபார பொருளியல்துறை, முகாமைத்துவம் மற்றும் தொழில் உரிமையான்மை துறை என்பன செயற்படும்.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் பௌதீக விஞ்ஞானத்துறை மற்றும் உயிரியியல் விஞ்ஞானத்துறை என்பன இயங்கும்;.

தொழில்நுட்பவியல் கற்கை பீடத்தில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்துறை செயற்படும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://documents.gov.lk/files/egz/2021/6/2231-05_T.pdf
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :