தபால் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்களுக்கான மாதாந்த கொடுப்பனவு, மருந்துகள் விநியோகம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்களவு சேவைகளை இன்று வியாழக்கிழமை முதல் மீண்டும் செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் தலைமையகம் தெரிவிக்கிறது.
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், முதியோர் கொடுப்பனவுகளை பெற வருபவர்கள் தம்மிடமுள்ள முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு காண்பித்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களுக்கு வருகை தர முடியும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ண தெரிவித்தார்.
சுகாதார சேவை அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க வீடுகளிலுள்ள நோயாளர்களுக்கு அரச வைத்தியசாலை மருந்தகங்களினால் வழங்கப்படும் மருந்துகள் கொவிட் 19 இன் முதல் அலையில் விநியோகிக்கப்பட்டதைப்போலவே இன்று (03) முதல் மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை நாடு தழுவிய ரீயிதில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
0 comments :
Post a Comment