முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா விடுதலையாகியமை குறித்து பல தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
இவரது பொதுமன்னிப்பு விடுதலைக்கு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவியான சுமனா பிரேமச்சந்திர கடும் எதிர்ப்பை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வெளியிட்டிருக்கின்றார்.
அதேவேளை, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடனேயே துமிந்தசில்வாவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்த போதிலும் நீதியமைச்சர் அலிசப்ரி அந்தத் தீர்மானத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றார்.
உடனடியாக இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் ஒட்டுமொத்த நீதிக்கட்டமைப்பிற்கும் அது சவாலாக அமையும் என்றும் அப்போது நீதியமைச்சர் சுட்டிக்காட்டியதாக தகவல் கூறுகிறது.
இந்த நிலையில் இன்று அதிரடியான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்று துமிந்த சில்வா வெளியே வந்திருக்கின்ற நிலையில், நீதியமைச்சர் அலிசப்ரிக்கு சற்று சங்கடமாகவே உள்ளதாக அரச மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றதுறை.
0 comments :
Post a Comment