கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச சபை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பெறுமதி மதிக்க முடியாதது என்று ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சீ.எம். நியாஸ் ஹாஜி தெரிவித்தார்.
ஏனென்றால், ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில்தான் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன.
சுகாதார தரப்பினர்கள்தான் ஜனாஸா நல்லடக்கப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு, டெங்கு மற்றும் கொரோனா பரவல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வரும் ஓட்டமாவடி சுகாதாரத் தரப்பினர் தங்களின் பணிகளை திறன்பட செய்து வருகின்றனர்.
அதுமாத்திரமின்றி, வர்த்தகர்களின் பிரச்சினைகள் மற்றும் வீதிகளில் நடமாடும் நபர்களை கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.
மக்களின் உயிர்களை பாதுகாக்க தியாக சிந்தனையோடு செயற்படும் சுகாதார தரப்பினர்களை நாம் எந்தவகையிலும் குறைகாண முடியாது. அவர்கள் செய்யும் பணிகள் பெறுமதி மதிக்க முடியாதது.
எனவே, குறித்த நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இரவு, பகலாக பணியாற்றும் சுகாதார தரப்பினர்களுக்கு நாம் என்றும் ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும் என்று வர்த்தக சங்கத் தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ் ஹாஜி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment