அரிசிக்கான தற்போதைய சந்தை விலையை குறைக்க ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்ப‌டு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஜ‌னாதிப‌தியிட‌ம் வேண்டுகோள்



கொரோன‌ தொற்று காரணமாக மக்களின் தொழில்க‌ள் ம‌ற்றும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் பொருளாதார நிலையைப் பாதுகாப்பதற்காக, பாரிய‌ நுகர்வோர் உற்பத்தியான அரிசிக்கான தற்போதைய சந்தை விலையை குறைக்க ந‌ட‌வ‌டிக்கை எடுக்கும்ப‌டு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி ஜ‌னாதிப‌தியிட‌ம் வேண்டுகோள் விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சியின் ஊட‌க‌ செய‌லாள‌ரும், கொழும்பு மாவ‌ட்ட‌ அமைப்பாள‌ருமான‌ திரு. இருக‌ ஜ‌ய‌சிங்க‌வினால் கௌர‌வ‌ ஜ‌னாதிப‌தி கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்தில் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

இந்த‌ சூழ் நிலையில் அரிசியின் விலை அதிக‌ரித்திருப்ப‌து நியாயமானதல்ல என்பதால், தாங்க‌ள் தலையிட்டு அரிசிக்கு நியாயமான விலையை வழங்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

அரிசியின் விலை குறைப்பின் மூல‌ம் ப‌ல‌ ஏழை ம‌க்க‌ளுக்கு த‌ம‌து ஜீவ‌னோபாய‌த்துக்கு இல‌குவாக‌ இருக்கும் என்ப‌தால் ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் இது விட‌ய‌த்தை க‌வ‌ன‌ம் எடுக்கும் ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :