கொரோனா அச்சுறுத்தலினால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை, பாண்டிருப்பு ,கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வறிய மக்களுக்கு உலருணவு பொருட்கள் கனடாவில் வசிக்கும் பிரபா மற்றும் செல்வன் ஆகியோரின் ஏற்பாட்டில் இன்று (5) மாலை 5 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டது .
இவ்வுலருணவு பொருட்களை குறித்த செயற்திட்டத்தினை ஒருங்கிணைத்து செயற்படுத்துகின்ற சமூக சேவகர் அ.நிமால் தலைமையில் பெரியநீலாவணை சமூக செயற்பாட்டாளர் திலகன் மற்றும் நிசாந்தன் மதிவதனன் தலைமையிலான குழுவினர் வீடு வீடாக சென்று விநியோகித்து வருகின்றனர்.
குறித்த உலருணவு பொருட்களில் அரிசி சீனி தேயிலை பால் மா உள்ளிட்ட பொருட்கள் உள்ளடங்குவதுடன் சுமார் இதுவரை 120 க்கும் அதிகமான தமிழ் பேசும் குடும்பங்களுக்கு இப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment