செம்மண்ணோடை வாராந்த சந்தை தொடர்பிலான விமர்சனம் : அரசியல் காழ்ப்புணர்ச்சி - பிரதேச் சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கடந்த இரு தினங்களாக செம்மண்ணோடை வாராந்த சந்தை தொடர்பிலும் அதன் வருமானம் தொடர்பிலும் பல்வேறு ஐயங்களும் விமர்சனங்களும் சமூக முக நூல் வலைத்தளத்தில் உலா வருவதை அவதானித்து வருகின்றேன் எனக்கெதிராக வெளிவரும் விமர்சனங்களில் பத்தோடு பதினொன்றாக இதனைக் கடந்து செல்ல முடியவில்லை என பிரதேச் சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

இன்றைய கொரோனா அதிகரிப்பு அச்சத்தை உண்டு பண்ணியுள்ள அதே வேளைஇ தினமும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இதன் காராணமாக பயணத்தடை தொடரும் சூழலில் அன்றாடம் கூலித்தொழில் செய்து தமது வாழ்க்கையை ஓட்டி வந்த மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியாத என்ற அங்கலாய்ப்பில் நாம் ஒவ்வொருவரும் இருக்கும் அசாதாரண சூழலில்இ வேலையற்றோரின் இவ்வாறான வீண் விமர்சனங்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இருப்பினும்இ கடந்து போனால் நாம் பதிலளிக்க முடியாமல் விரண்டோடுவதாகஇ நாம் கையாடல் செய்து விட்டதாக பதிவாகி விடும் எனும் நோக்கில் இதனூடாக சில தெளிவூட்டல்களை வழங்க விளைகின்றேன்.

வாராந்த சந்தை இல்லாமலாக்கப்பட்ட வரலாற்றை விமர்சிப்போர் புரிந்து கொள்ள வேண்டும்.

மீராவோடை மக்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்பாக இருந்த மீராவோடை மண்ணின் வாராந்த சந்தை அரசியல் வங்குரோத்து காரணமாக முன்னாள் அமைச்சரினால் மறைமுக அழுத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

இச்சம்பவம் மீராவோடை மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பை உண்டு பண்ணியதுடன்இ இதை ஒட்டுமொத்த கல்குடா சமூகமும் மிகவும் கவலையுடன் நோக்கியது.

ஓட்டமாவடி பிரதேச சபை மீராவோடை வாராந்த சந்தையினைத் தொடர்புபடுத்தி மீராவோடை ஜும்ஆ பள்ளிவாசலுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்துஇ வாராந்த சந்தையை இடைநிறுத்தியதுடன்இ இன்று வரை அவ்வழக்கு நடைபெற்று வருகின்றது. இது எமது சமூகம் அறிந்த விடயம்.

இவ்வாறு இல்லாமலாக்கப்பட்ட மீராவோடை வாராந்த சந்தைக்கு மாற்றீடாகவும்இ மீராவோடையை அண்மித்த பகுதியில் வாராந்த சந்தை நடைபெற வேண்டுமென்ற மீராவோடை சகோதரர்களின் வேண்டுகோளுகிணங்கவும் எமது மண்ணின் ஏழை மக்களும் வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும் பயனடையும் இந்த வளம் கைநழுவிப் போக்கூடாது என்பதற்காகவும் இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமென்ற உன்னத நோக்கிலும் கடந்த 03.06.2019ம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற 16வது சபை செம்மண்ணோடை வாராந்த சந்தை தொடர்பான பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இப்பிரேரணை உறுப்பினர்களான கதிரவேலு நல்லரட்ணம்இ முகம்மது புகாரி வாசுதீன் ஆகியோரின் வழிமொழிவுடன் உறுப்பினர்கள் அனைவரதும் ஏகமனதான ஆதரவுடன் வாராந்த சந்தைக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

இதன் மூலம் செம்மண்ணோடை மக்கள் மட்டுமல்லாதுஇ இப்பிரதேச ஒட்டுமொத்த மக்களும் வியாபாரிகளும் சிறு உற்பத்தியாளர்களும் நன்மையடைந்து வருகின்றனர்.

அத்தோடுஇ கொரோனா அதிகரிப்பினால் பயணத்தடை அமுலிலுள்ள இந்த நாட்களில் மக்கள் வெளிச்செல்ல முடியாத சூழ்நிலையில் மற்றவர்கள் போல் படம் காட்டாமல் பல்வேறு சேவைகளை திரைமறைவில் செய்து வருகின்றேன்.

இதனைத் தடுக்கும் நோக்கில் சில முற்றுப்பெறாத ஆவணங்களை வைத்துக் கொண்டு என்னை விமர்சித்து கொண்டிருக்கின்றார்கள்.

இதன் பின்புலத்தில் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களின் சதிகள் இருப்பதை அவதானித்துக் கொண்டிருக்கும் நடுநிலையான சகோதரர்கள் நன்கறிவார்கள்.

இது மாத்திரமல்லாமல்இ எனது தொழில் ரீதியாக என்னை பின்னடைவுக்குக் கொண்டு வரும் நோக்கில் என்னோடிருந்த சில சகோதரர்களையும் ஆசை வார்த்தை கூறி அவர்கள் பக்கம் சாய்த்து எனது செயற்பாடுகளை முடக்குவதற்கான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் கண்டு பின்வாங்கி அஞ்சி ஒதுங்கப் போவதில்ல்லை. வறியஇ கஷ்டப்படும் மக்களுக்கான என்னால் முடிந்த எனது சேவைகள் தொடரும்.

செம்மண்ணோடை வாராந்த சந்தையை கொண்டு நடாத்துவதற்காக கோரளைப்பற்று பிரதேச சபையிடம் முறையாகப் பெற்றுக் கொண்ட உரிய குத்தகை ஆவணங்களும் அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட பற்றுச்சீட்டுகளும் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

குத்தகை பணம் தவிர்ந்த மீதமுள்ள பணத்தின் மூலம் எமது பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டினைக் கருத்திற்கொண்டு “அகரம்” கல்வி நிலையத்தை இஸ்தாபித்து நடாத்தி வருகின்றோம்.

அத்துடன்இ இக்கல்வி நிறுவனத்தினூடாக பல ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை ஊட்டி வருகின்றேன்.

இதன் மூலம் கிடைக்கப்பெறும் எந்தவித மேல்திக வருமானங்களும் கையாடல் செய்யப்படவோ அநியாயமான முறையில் செலவிடப்படவோ இல்லையென்பதை இறைவன் மீது ஆணையாக கூறிக்கொள்கின்றேன்.

அவ்வாறு உங்கள் யாருக்காவது இது தொடர்பில் சந்தேகமிருப்பின் என்னைத் தொடர்பு கொண்டால் அதற்கான முழு ஆதாரங்களையும் வழங்க தயாராக இருக்கின்றேன்.

அதைவிடுத்து அடிப்படை ஆதாரமில்லாமல் சமூக வலைத்தலங்களில் பதிவதனூடாக எதனையும் கண்டு கொள்ள முடியாது.

வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அல்லது என்னை இவ்வாறான பணிகளிலிருந்து ஓரங்கட்ட வேண்டுமென்ற முன்னாள் அமைச்சரின் நிகழ்ச்சி நிரலிலில் என்னை போலியாக விமர்சித்து வருவதை நிறுத்தி விட்டுஇ கொரோனா பேரிடரில் எம்மால் முடிந்ததை எமது பிரதேச மக்களுக்கு செய்வோம்.

தற்போது தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வாராந்த சந்தைக்கு ஆதரவாக அமையுமிடத்து. மீண்டும் மீராவோடையில் வாராந்த சந்தையினை ஆரம்பிக்க பூறண ஒத்துழைப்புக்களை வழங்கவும் அதற்கு மாற்றீடாக தற்போது நடைபெறும் செம்மண்ணோட வாராந்த சந்தை மூடப்பட வேண்டுமென்ற நிலை உருவானால் மீராவோடை மக்களின் கோரிக்கையை மதித்து அவர்களுக்காக மூடி விடவும் தயாராகவுள்ளேன்

அத்தோடுஇ செம்மண்ணோடை வாராந்த சந்தை மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும்இ கணவனால் கைவிடப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பம் மற்றும் தந்தையை இழந்து வருமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்விக்காக மாத்திரமே செலவிடப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விபரங்கள் தேவையானவர்கள் என்னை நேரில் சந்தித்து தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

அரசியல் இலாபத்திற்காக செம்மண்ணோடை வாராந்த சந்தை தொடர்பில் விமர்சிப்பவர்களேஇ நீங்கள் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் விமர்சிப்பது என்னையல்ல. இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியினால் பயன்பெற்று கல்வியைத் தொடரும் ஏழை மாணவர்களின் கல்வியே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :