குருனாக‌ல் முஹம்மட் நுஸ்ரான் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சியில் இணைவு



ல் சமூக சேவையாள‌ரும் தேசிய / சர்வதேச அள‌வில் அறிமுக‌ம் பெற்ற‌ கராத்தே விளையாட்டு போட்டிக‌ளில் வெற்றி பெற்றவ‌ருமான‌குருனாக‌ல், ம‌ல்க‌டுவாவ, பண்டாரநாயகபுரயை சேர்ந்த‌ சுலைமான் லெப்பே முஹம்மட் நுஸ்ரான் அவ‌ர்க‌ள் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சியில் இணைந்துள்ளார்.

அத‌னைத்தொட‌ர்ந்து இவ‌ர் க‌ட்சியின் குருனாக‌ல் ந‌க‌ர‌ ச‌பை பிர‌தேச‌ இணைப்பாள‌ராக‌ க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதினால் நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

இவ‌ர் ச‌வூதி, ஓமான், குவைத் நாடுக‌ளில் பயிற்சியாளராக‌வும்
வ‌ட‌ மேல் மாகாண‌ பாட‌சாலை பயிற்றுவிற்பாள‌ராக‌வும்
முன்னாள் ப‌ர‌க‌தெனிய‌ முஸ்லிம் பாட‌சாலை, பான‌க‌முவ‌, ப‌க்மீகொல்ல‌,ரம்புகன்தெனிய பாடசாலை, அல் ஜப்பார் கலகெதர, கடுகஸ்தொட சாகிரா பாடசாலை, வெஸ்ஹுட் சர்வதேச பாடசாலை, த‌ல்க‌ஸ்பிட்டிய‌, மாவ‌த்த‌க‌ம‌ முஸ்லிம் பாட‌சாலைக‌ள், வ‌ய‌ம்ப‌ ச‌ர்வ‌தேச‌ பாட‌சாலை ,வெலகெதர மல்கடுவாவ பாடசாலை,
போன்ற‌வ‌ற்றின் ப‌யிற்சியாள‌ராக‌வும் க‌ட‌மை புரிந்த‌த‌ன் மூல‌ம் ச‌மூக‌த்தின் ந‌ன்ம‌திப்பை பெற்ற‌ ஆசிரிய‌ர் ஆவார்.

அத்துட‌ன் ம‌னித‌ உரிமை அமைப்பின் குருனாக‌ல் பிரிவு அமைப்பாள‌ராக‌வும், விசார‌ணை அதிகாரியாக‌வும்,m முன்னாள் ம‌ல்க‌டுவாவ‌ பிர‌ஜா பொலிஸ் அமைப்பின் உப‌ செய‌லாள‌ராக‌வும், ம‌ல்க‌டுவாவ‌ ம‌ஸ்ஜிதுல் முஹ‌ம்ம‌திய்யா நிர்வாக‌ உறுப்பின‌ராக‌வும் ப‌ணி புரிகின்றார்.

தற்போது குருநாகல் வெல்லவ பாடசாலை, மல்லவபிடி USKU கராத்தே ( DOJO) பாடசாலை ப‌ணி புரிகின்றார்.
நாட்டிலுள்ள‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளில் ம‌க்க‌ளை அர‌சிய‌லின் பெய‌ரால் ஏமாற்றாம‌ல் உண்மையாக‌வும், நேர்மையாக‌வும் செய‌ற்ப‌டும் ஐக்கிய‌ காங்கிர‌சின் ப‌ல‌ கால‌ செய‌ல்பாடுக‌ளை பார்த்த‌ பின் அக்க‌ட்சியில் இணைந்து செய‌ற்ப‌டுவ‌த‌ன் மூல‌மே ச‌மூக‌த்துக்கு ந‌ல்ல‌தொரு அர‌சிய‌ல் பாதையை காண‌ முடியும் என்ப‌தை உண‌ர்ந்து ஐக்கிய‌ காங்கிர‌சில் இணைந்து கொண்ட‌தாக‌ முஹம்மட் நுஸ்ரான் தெரிவித்துள்ள‌ர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :