எமது ஊரில் சமூக சேவையில் தன்னையே அர்ப்பணித்து சேவை செய்து வரும் தேசக் கீர்த்தி அல்ஹாஜ் எம்.ஜே.எம். மஹ்துான்; பலாங்கொடை பள்ளிகள் பரிபலான சபையின் தலைவா் பற்றி எழுதுவதற்க்கு என் மனம் நாடியது....
அவா் பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் பதவிக்கு முன் எமது பலாங்கொடை முஸ்லிம் பாடசாலையில் காட்சி தரும் வாசிகசாலையை வடிவமைத்து அவரது தனி திட்டமிட்டும் நவீனமுறையில் அவரது சொந்த
பணத்திலேயே நிர்மாணித்துக் கொடுத்துள்ளாா்
அதன் பின்னா் 1966ஆம் ஆண்டிலிருந்து பலங்கொடை பள்ளிபரிபலான சபைத் தலைவராக தெரிபு செய்யப்ட்டாா். அத்துடன் பலாங்கொடையில் உள்ள 14 பள்ளிவாசல்களை ஒரே நிர்வாகத்தின் கீழ் கெண்டு மிக சிறப்பாக நிர்வாகித்து வருகின்றாா்.
இந்த பாரிய பொறுப்பை எமது தலைமைத்துவம் எடுக்கும் சந்தர்ப்பத்தில் மிக நெருக்கமானவரும் ,அனுபவத்தில் தேர்ச்சிபெற்று ஏற்கனவே பள்ளிகள் பரிபாலனை சபை தலைவராக கடமையாற்றிய காலம் சென்ற முன்னாள் அமைச்சா் எம்.எல்.எம் அபுசாலி காலத்தில் செயலாளராக மர்சூக் அவ்களையும் இணைத்துக் கொண்டு இந்த நற்பணியைத் தொடா்ந்தாா். அன்று தொடக்கம் இன்று வரை பலாங்கொடை பள்ளி நிர்வாகத்தினை சகல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து அத்தனை சவால்களையும்
வெற்றிகொண்டு அதனை மஹ்துான் தொடா்ச்சியாக முன்எடுத்து வருகின்றாா்.
மஃதூன் ஹாஜியார் என்ற தனிமனித ஆளுமையை சமூகத்திற்காக பனியாற்றிக்கொண்டிருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியடைகிறேன். இவர் பிற மத சகோதரர்களுடன் சக வாழ்வுடன் மிக நெருக்கமாக பழகுவது எமது ஊரின் ஒற்றுமைக்கு பக்க பலமாக உள்ளது.
பலாங்கொடை பள்ளிவாசல்கள் பரிபாலன சபையின் நிர்வாகத்தின் தலைவர் மஃதூன் , செயளாளர் அல்ஹாஜ் மர்சூக். இவர்களது காலப்பகுதியில் தான் பலாங்கொடை பெரிய பள்ளிவாசல் அழகிய வடிவில் பிரமாண்டமான
முறையிலும் கட்டியெழுப்பபட்டது ஒரே நேரத்தில் பலாயிரக்கான மக்கள் தொழக்கூடிய பள்ளி வாசல் ஊர்மக்கள் சிறந்த ஏனைய நிர்வாக உறுப்பிணா்கள் புத்திஜீவிகள் , நன்கொடையாளா்கள் உதபியுடன் இப் பள்ளி கட்டுமானம் நிறைவேற்றப்பட்டடை குறிப்பிடத்தக்கதாகும்
பள்ளிசால்லுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வகையில் எமது பள்ளிக்கு முன்னால் காட்சியளிக்க கூடிய அழகிய கடைத்தொகுதியும் இவர்களுடைய காலப்பகுதியிலேயே நிர்மாணிக்கப்பட்ட து
பலாங்கொடை வரலாற்றில் 2003 ஆண்டு முதற்தடவையாக கூட்டு சகாத் இவர்களது காலத்திலே உருவாக்கம் பெற்றன மாஷா அல்லாஹ் இவர்களது காலப்பகுதியில் தான் 170 காணிகள் துண்டாக பிரிக்கப்பட்டு
48 வீடுகள் அமைத்து மக்களை குடியேற்றினார்கள் இந்த தலைமைத்துவத்தின் கீழ் தான் கடந்த 2018 ஆண்டு அகில இலங்கை
ரீதியாக நிர்வாகங்களுக்கு இடையில் நிர்வாக திறன் சம்மந்தமான போட்டியில் தேசிய ரீதியில் விருது விழாவின்போது பலாங்கொடை பள்ளிவாசல் சிறந்த நிர்வாக விருதும் கிடைக்கப்பெற்றது.
கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு நேரிட்ட பயங்கரவாத சூழ் நிலையில் கூட பெரும்பான்மை சமூகத்துடன் ஏற்கனவே இருந்த தேசிய நல்உறவு நல்லிணக்கம் பலப்படுத்தப்பட்டிருந்த படியால் எமது ஊரில் எந்த இனப் பிரச்சினையும் உருவாகவில்லை. சிறந்த தலைமைத்துவத்தின் நல்லிணக்கம் சகவாழ்வு எமக்கு சாதகமாகவே அமைந்தது.
எமது தலைவர் அவருக்கென்று சில பிரத்தியேகமாக சில விடயங்கள் தொடர்ச்சியாக செய்து வருகிறார் ஊரில் ஏதாவது வைபவத்துக்கு அழைத்தால் முதலாவதாக வரக்கூடிய நற்பண்பு தலைவரிடம் உள்ளன.
ஊரில் ஏதாவது நற்காரியங்களுக்கு பண உதவி அல்லது பொருள் உதவி பெற சென்றால் ஒரு போதும் மற்றவர்கள் எவ்வளவு தந்தார்கள் என்று கேற்க்கமாட்டார்கள் அவரால் உதவக்கூடியதை செய்து விட்டு மொளனமாக இருப்பார்கள்.
ஏழை எளியவா்களுக்கு உதவுபவா்கள் இறைவன் மேலும் மேலும் அள்ளி வழங்குவான் என இஸ்லாமிய கோட்பாட்டுக்கு இனங்க அவா் உதவி வருகின்றாா்.
ஆகவே எமக்கு கிடைத்த இந்த தலைமைத்துவம் எதிர் காலங்களில் இன்னும் பல நல்ல விடயங்களை மேற் கொண்டு ஊரின் ஒற்றுமையை உறுதிபடுத்தி ஊர் ஐமாத்தினரை ஒரே கூடைக்குள் ஒன்றினைத்து மிகுதியுள்ள காலத்தை சமூகத்திற்காக அர்பனிப்பதற்க்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவனாக
நீண்ட ஆயுளையும் வழங்குவானாக.
ஆக்கம் - கியாஸ் ஸலாம்
இரத்தினபுரி
0 comments :
Post a Comment