நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் தேவையின்றி மக்கள் வெளிச் செல்வதை தடுக்கும் வகையில் பாதுகாப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரதான வீதிகளில் தேவையின்றி வரும் மக்களை சோதனை செய்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் அனுமதி பெற்றவர்கள் மற்றும் மருந்தகங்கள் என்பவற்றுக்கு செல்பவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், தேவையின்றி வெளியில் செல்பவர்களை பரிசோதனை செய்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மருந்தகங்கள் மாத்திரம் திறந்து காணப்படுவதுடன், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment