ஷெங்கரில்லா நட்சத்திர ஹோட்டலில் நடந்த சர்ச்சைக்குரிய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மற்றுமொரு பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சிரேஷ்ட புகழ்பெற்ற நடிகராகிய ஜெக்சன் அந்தனியின் மகளான மாதவீ ஜெக்சன் மற்றும் அவரது கணவரு்ம இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே 15 பேர் கைது செய்யப்பட்டடனர்.இன்று 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் சந்திமாலல் ஜயசிங்கவின் தாயாரும் கைதாகி உள்ளார்.
இவர்கள் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேவேளை, இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உணவுப்பறிமாறிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment