நாடு பூராகவும் பயணக் கட்டுப் பாடு 21ஆம் திகதி நீக்கப் படவுள்ளதால் கிண்ணியாவில் வாழும் பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்ந்து கொள்மாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் சென்று தமது தேவைகளை நிறைவேற்றுமாறும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப் படுத்தப் பட்டன. றகுமானியா நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் தனிமைப் படுத்தப் பட்ட குடும்பங்களுக்கு 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் 2ஆம் கட்டமாக கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் (19) கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம்அப்துல் பரீட் தலைமையில் வழங்கி வைக்கப் பட்டன.
இந் நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலக பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத்,அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.எம்.பாசித்,றகுமானியா கிராம உத்தியோகத்தர் ஏ.சி.எம்.அப்துல் பரீட்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோத்தர் கே.எம்.உவைஸ்,அபிவிருத்தி் உத்தியோகத்தர் .எம்.எஸ்.சமீமா மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இங்கு கிண்ணியா பிரதேச செயலாளர் மேலும் குறிப்பிட்டதாவது கடந்த ஆம் 14 திகதி இப்பகுதி முடக்கப் பட்டது.2வது தடவையாக 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப் படுகின்றன.ஏற்கனவே 5ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகள் வழங்கப் பட்ட முதல் தடவையாக வழங்கப் பட்டவர்களுக்கு மீள வழங்கப் படுகின்றது.மாறாக புதியவர்களுக்கு இப் பொதி வழங்கப் பட மாட்டது.
வெளியிடங்களுக்கு சென்று புதிதாக வந்தவர்களுக்கு நோய் தொற்று உள்ளதா? இல்லையா? என்பதை கிராம உத்தியோகத்தர் ஆராய்ந்து பி.சிஆர்,அண்டிஜனை மேற்கொள்மாறு கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனாவினால் கிண்ணியாவில் 55 உயிர்களை இழந்துள்ளோம்.இனியும் இவ் இழப்புகளிலிருந்து விடு பட நாம் அனைவரும் வீடுகளில் பாது காப்பாக இருக்க வேண்டும் என்றார்.
0 comments :
Post a Comment