இது பற்றி ஐக்கிய காங்கிரசின் செயலாளர் ஸாஹித் முபாறக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
" நாடு முழுவதும் 1000 தேசிய பாடசாலைகள் " திட்டத்தின் கீழ் கல்முனை கோட்டத்தின் கீழ் உள்ள பல பாடசாலைகள் உள்வாங்கப்பட்டன. கடந்த அரசின் போது பல முஸ்லிம் அமைச்சர்களிடமும் அம்பாரை மாவட்ட கல்விச்சமூகம் இது பற்றி பல கோரிக்கைகள் விடுத்தும் எதுவும் நடக்கவில்லை.
ஆனாலும் முஸ்லிம்களால் இனவாத அரசு என பிழையாக முத்திரை குத்தப்பட்ட கோட்டாபய, மஹிந்த ராஜபக்ஷ அரசு இது விடயத்தை கருத்தில் எடுத்து பல முஸ்லிம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக உள் வாங்கியுள்ளது. இதன் மூலம் மாணவ சமூகமும் பாடசாலைகளும் பல வளங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொதுஜன பெரமுனவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காக பாடுபட்ட கட்சி என்ற வகையில் எமது கட்சி, இவ்வாறு தேசிய பாடசாலைகளாக உள்வாங்கப்பட்டமைக்காக பெருமைப்படுகிறது.
0 comments :
Post a Comment