ரிஷாட் பதியுதீனின் மனு பரிசீலனையில் இருந்து நீதிபதிஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகல்!



முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனை செய்யும் நீதிபதிகள் குழாமில் இருந்து மேலும் ஒரு நீதிபதி இன்று (23) விலகியுள்ளார்.

தம்மை கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்தல் சட்ட விரோதமானது என தீர்ப்பினை வழங்குமாறு கோரி அவர்களால் குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த மனுக்கள் இன்று பிரீதி பத்மன் சூரசேன, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது, தனிப்பட்ட காரணத்தினால் தான் குறித்த மனுக்கள் பரிசீலனையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் குழாம் உறுப்பினரான ஏ.எச்.எம்.டி. நவாஸ் அறிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :