ஹமாஸிடம் பலத்த அடிவாங்கியதனால் ஆட்சி அதிகாரத்தை இழக்கும் நெத்தன்யாகு ? புதிய ஆட்சியில் சமாதானம் நிலைக்குமா ?



இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவின் பன்னிரெண்டு வருடகால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இஸ்ரேலின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட உள்ளதனை முன்கூட்டியே அறிந்ததன் காரணமாக அதன் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் ரமழான் இருபத்தியேழாவது நாளில் யூத படைகள் மஸ்ஜிதுல் அக்சாவுக்குள் நுழைந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள்மீது வேண்டுமென்று தாக்குதல் நடாத்தப்பட்டது.

அதன்பின்பு இஸ்ரேல் ஹமாஸ் இயக்கங்களுக்கிடையில் பதினொரு நாட்கள் போர் நடைபெற்றது. ஆனால் இந்த போரில் இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு எதிர்பார்த்ததுபோன்று வெற்றி கிடைக்கவில்லை.

“ஹமாஸ் இயக்கத்தை முற்றாக அழித்துவிட்டு அதில் எஞ்சியோர் வெள்ளைக்கொடியுடன் சரண் அடையும் வரைக்கும் யுத்தத்தை நிறுத்தமாட்டேன்” என்று நெத்தன்யாகு சபதமிட்டிருந்தார்,

ஆனால் இறுதியில் காஸாவுக்குள் தரைப்படைகளை அனுப்பாமலும், ஹமாஸ் இயக்கத்துடன் எந்தவித நிபந்தனைகளை விதிக்காமலும் போர் நிறுத்தத்தினை மேற்கொண்டிருந்தார். இது இஸ்ரேலிய கடும்போக்காளர்கள் மத்தியில் கோபத்தை உண்டுபண்ணியது.

அத்துடன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களை உலகுக்கு மறைத்தாலும், அங்குள்ள எதிர்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளிடம் எதையும் மறைக்க முடியவில்லை.

இதனால் எந்த நோக்கத்துக்காக பாலஸ்தீனர்களுடன் போர் தொடுத்தார்களோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. இது பற்றி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது விரிவாக எழுதியிருந்தேன்.

சிலநேரம் போரில் இஸ்ரேல் வெற்றிபெற்றிருந்தால், இன்றைய ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான எந்த தேவையும் ஏற்பட்டிருக்காது. பெஞ்சமின் நெத்தன்யாகு யூதர்களின் பலம்பொருந்திய தலைவராக கணிக்கப்பட்டிருப்பார்.

இன்று இஸ்ரேலிய பிரதமருக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்க இணக்கம் கண்டுள்ள கட்சிகளில் கடும்போக்கு யூத தீவிர கட்சிகள் உள்ளன.

அதாவது பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்றும், யூத குடியிருப்புக்களை விஸ்தரிப்பதுடன், மஸ்ஜிதுல் அக்ஸாவை உடைத்துவிட்டு “சாலமன்” தேவாலயத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்ற கொள்கையுடையவர்களே அந்த கடும்போக்காளர்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வாறான கடும்போக்கு கொண்ட யூத தீவிரவாத கட்சிகளின் புதிய கூட்டணியில் அரபிய கட்சி ஒன்று இணைந்திருப்பதுதான் ஆச்சர்யமான ஒன்றாக கருதப்படுகின்றது.

எனவேதான் இன்னும் ஓரிரு நாட்கள் இருக்கின்ற நிலையில், புதிய கூட்டணி ஆட்சி அமைப்பது சாத்தியமா ? அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஹமாஸுடன் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீடிக்குமா ? அல்லது இறுதிநேரத்தில் பிரதமர் நெத்தன்யாகு தனது ராஜதந்திர முயற்சியின் மூலமாக பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்று ஆட்சியை தொடர்வாரா ? பொறுத்திருந்து பாப்போம்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :