ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று முழங்கிய புதிய யூத பிரதமர்



முகம்மத் இக்பால்-
பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத தேசத்தின் 13 வது பிரதமராக Naftali Bennett நேற்று 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார்.

120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் Naftali Bennett க்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஏழு ஆசனங்களைக்கொண்ட ஒரு சிறிய கட்சியின் தலைவரான Naftali Bennett அவர்கள் பிரதமராக பதவியேற்ற நிலையில், பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக்கொண்ட பெஞ்சமின் நெத்தன்யாகு தனது பன்னிரெண்டு வருடகால ஆட்சியை இழந்தது ஓர் ஆச்சர்யமான விடயமாகும்.

கடும்போக்குவாத இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கைப்பெற்றியுள்ள புதிய பிரதமர் தனது கொள்கையுரையில், “ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதனை ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்” என்று முழங்கியுள்ளார்.

இஸ்லாமிய உலகை பொறுத்தவரையில், ஆக்கிரமிப்பு தேசமான இஸ்ரேலில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் காட்சிகள் எல்லாம் ஒன்றாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :