அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு!



றிசான் றாசீக்-
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வழிகாட்டலில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று (03)ம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையில் நடைபெற்றது.

இன் நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.வீரசிங்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ.ஷாபீர் அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஹங்க சாதூரிக்க, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பீ.விஜயதுங்க,அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஜ்வத் அவர்களும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ அவர்களின் அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் கேசரா ஹசுன், அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் உடற்கல்வி ஆசிரியருமான ஜெஷீல், கௌரவ பாதுகாப்பு அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.சீ.றிஷாத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாலமுனை செயற்பாட்டாளர் சவ்பத் அல்பி,
பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சீத் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மேளனத்தின் உப தலைவருமான எம்.ஏ.எம்.சர்பான் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் மேலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :