இன்று பயணத்தடை நீக்கப் படுவதனால் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை விடுக்கும் அறிவிப்பு



எம்.ஏ.முகமட்.-
ன்று பயணத்தடை நீக்கப் பட்டதையடுத்து கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது
கிண்ணியா பிரேதசத்தில் அதிகரித்த தொற்றுக்கள் மற்றும் மரணங்களையடுத்து 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப் பட்டு பொது மக்களின் ஒத்துழைப்பின் காரணமாக எமது பிரதேசத்தை ஒரளவு பாதுகாத்திருக்கின்றோம்.இந் நிலையில் இன்று பயணத்தடை நீக்கப் படுவதனால் பின்வரும் விடயங்களை அவசியம் கடைப்பிடித்து நம்மையும்,நமது பிரதேசத்தையும் ,நாட்டையும் பாதுகாத்துக் கொள்வோம்.

நமது பாதுகாப்புக்காக நம் வீடுகளில் பாதுகாப்பாக இருப்போம்.அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு வீட்டில் இருந்து ஒருவர் மட்டும் வெளியில் செல்வதுடன் சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக கடைப் பிடித்தல்.

ஒன்று கூடும் இடங்களையும் அவசியமற்ற பிரயாணங்களையும் முற்றாக தலிர்ந்து கொள்ளல்.

தற்போது நாட்டில் உருமாற்றமடைந்த கொரோனா புதிய வகையான டெல்டா வைரஸ் பரவுவதால் பொது மக்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளல் வேண்டும்.

இக் கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் துல் கஹ்தா மாதமாக இருப்பதாலும்,துல் ஹஜ் மாதத்தை எதிர் கொண்டிருப்பதாலும் சுன்னத்தான நோன்புகளை நோற்று ,அல்லாஹ்விடம் நெருங்கி இப் பாரிய நோய்கள், சோதனைகளிலிருந்து பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் உருக்கமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.

நாட்டில் சட்ட ஒழுங்குகளை மதிப்பதுடன்,சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தல்.

இக் கொரோனா அனர்த்தத்திலிருந்தும் ஏனைய நெருக்கடிகளிருந்தும் நமது பிரதேசத்தினையும்,நாட்டினையும் உலக மக்களையும் பாதுகாத்து,முஸ்லிம்களுக்கு எதிரான சோதனைகளையும் நீக்கி வைப்பானாக என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :