அம்பாறை மாவட்டத்தில் ஏலவே முடக்கப்பட்டிருந்த சம்மாந்துறை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக் கிராமம் நேற்று(21)முதல் மீண்டும் 14தினங்களுக்கு முடக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பான அறிவித்தல் நேற்று இராணுவத்தளபதியினால் வெளியானது.இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்றுக்காரணமாக 12மாவட்டங்களில் 18பொலிஸ் பிரிவுகளிலுள்ள 24 கிராமங்கள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
அவற்றுள் வடக்கு கிழக்கில் ஆக 3மாவட்டங்களில் அதாவது யாழ்.மாவட்டத்தில் மானிப்பாய் பொலிஸ்பிரிவில் சாவற்காடு எனும் கிராமமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்; பொலிஸ்பிரிவில் ஏறாவூர்.2 பிரிவும் வாழைச்சேனை பொலிஸ்பிரிவில் மீராவோடை கிழக்கு மீராவோடை மேற்கு மற்றும் மாஞ்சோலை பதுரியா கிராமங்கள் அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி கிராமமும் முடக்கபட்டிருக்கின்றன.
அவற்றுள் ஒன்றான புதிய வளத்தாப்பிட்டிக்கிராமம் மீண்டும் முடக்கப்பட்டிருக்கிறது.
இங்கு ஏலவே இந்த மாதம் 4ஆம் திகதி முதலாவது முடக்கம் அறிவிக்கப்பட்டது. ஏலவே பயணத்தடையால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இதுவோர் மேலதிக சவாலாக இருந்தது. எனினும் அரசாங்கமும் பல அமைப்புகளும் உலருணவுகளை வழங்கியிருந்தன.
அதன் தொடர்ச்சியாக நேற்று மீண்டும் அக்கிராமம் முடக்கப்பட்டிருக்கிறது.
முதலாவது முடக்கத்தின்போது 14தினங்களுள் அரசாங்கத்தின் 5000ருபா பெறுமதியான இரண்டு உலருணவு நிவாரணத்தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
ஆனால் ஒரேயொரு பொதியே இதுவரை பிரதேசசெயலகத்தால் தமக்க வழங்கப்பட்டதாக மக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். தற்போது இரண்டாவது முடக்கமும் அமுலபடுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் தமக்கு நிவாரணம் வழங்குமாறு சமுகசெயற்பாட்டாளரும் தவிசாளருமான கே.ஜெயசிறிலிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment