காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (04) காலை பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் உட்பட 32 பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவர் மட்டும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனையோர்களின் பரிசோதனை முடிவுகள் நெக்கடிவாக வந்துள்ளது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் அவர்களின் மேற்பார்வையின் கீழ் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எஸ். வேல்முருகு , பொது சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், நுளம்பு கள தடுப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட 32 உத்தியோகத்தர்களுக்கான அண்டிஜென் பரிசோதனையிலையே ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தவார நடுப்பகுதியில் காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கும் அவருடைய குடும்பத்தினர் மூவரும் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment