பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை நீக்கம்!



நாட்டுக்குவரும் அனைத்து பயணிகள் விமானங்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்று தொடக்கம் நீக்கப்படுவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

இருப்பினும் நாட்டுக்குவரும் விமானங்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்று விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்

ஒரு விமானத்தில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 75 அல்லது அதற்கு குறைந்த எண்ணிக்கையாகும் என்றும் இராஜாங்க அமைச்சர் டீ. வீ.ஜானக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கையில் ,,இந்திய மற்றும் வியட்நாம் நாட்டவர்களுக்கு இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படாது கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவிலும் வியட்நாமிலும் தங்கியிருந்தவர்கள் அந்த நாடுகளின் விமான நிலையங்களை பயன்படுத்தி இலங்கைக்குள் வர அனுமதிக்கப்படமாட்டார்கள்.

குறிப்பிட்ட நாடுகளின் கொவிட் தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு அதன் பின்னர் சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகள் தொடர்பில் அவ்வாறான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் அந்த நாடுகளில் தங்கியிருக்கும் இளைஞர்களும் சுற்றுலாப்பயணிகளும் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடித்து இலங்கைக்கு வர முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :