பயணத்தடையை முறையாக அமுல்படுத்த பிரதேசசெயலாளர் களத்தில்..



வி.ரி.சகாதேவராஜா-
ரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள பயணத்தடையை மேலும் அர்த்தபுஸ்டியாக்கி முறையாக அமுல்படுத்த பிரதேச செயலாளர் களத்தில் இறங்கிய சம்பவம் திருக்கோவிலில் இடம்பெற்று ள்ளது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் நேற்று தனது அலுவலக குழாத்தினரோடு பொலிசாரின் துணையுடன் வீதியில் இறங்கி அனுமதியின்றி பயணிக்கும் வாகனங்களை சோதனையிட்டனர்.

பிரதான வீதிகளில் பயணத்தடையை மீறி செயற்பட்ட வாகனங்கள் மற்றும் நபர்களிடம் அனுமதிபத்திரம் இருக்கிறதா எனும் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அனுமதி பத்திரம் இல்லாமல் சென்றவர்கள் மீது சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது....
இவ் வீதி சோதனைகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஜ.பி.திலகரெத்தின ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்றன.

இதன்போது பிரதான வீதிகளில் பயணம் செய்த வாகனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரது பயண அனுமதி பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு இருந்ததுடன் முககவசங்கள் முறையாக அணியாத நபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்தம் வீதிகளில் தேவையற்ற முறையில் நடமாடுபவர்கள் முறையாக பயண அனுமதிகள் பெற்றுக் கொள்ளாத நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் பொலிசாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்தார்.

இவ் வீதி சோதனையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணிக் குழு உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்படி வீதிச் சோதனைகளை முன்னெடுத்து இருந்துடன் இவ் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :