நீண்ட கால அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பதை நாம் பாராட்டி ஆக வேண்டும்.கடந்த நல்லாட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பலம் வாய்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.அந்த நேரத்தில் இவர்களை விடுதலை செய்ய முடியாமல் போய்விட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிமை கோருவதற்கு எந்தவித அருகதையும் கிடையாது என பிரபல அரசியல் விமர்சகரும் வர்த்தக பிரமுகருமான எம்.எச்.எம் இப்ராஹீம் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று(25) காலை கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
அரசியல்வாதிகள் சில நன்மைகளை செய்வது அவர்களது இலாபத்துக்காக ஆகும்.இலாபத்துக்காக சில விடயங்களை நாம் செய்கின்ற போது அதனை குறை கூற முடியாது.அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பது என்பது அரசாங்கம் செய்திருக்கின்ற விடயம் முற்போக்கான நடவடிக்கை ஆகும்.நீண்ட கால அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பதை நாம் பாராட்டி ஆக வேண்டும்.கடந்த நல்லாட்சி அரசில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பலம் வாய்ந்த நிலையில் இருந்திருக்கின்றார்கள்.
அந்த நேரத்தில் இவர்களை விடுதலை செய்ய முடியாமல் போய்விட்டது.இதற்கு நடவடிக்கையும் எடுக்க முடியாமலும் போய்விட்டது.ஆனால் எந்த விதமான ஆதரவும் இன்றி இருக்கின்ற அரசாங்கம் தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை பெற வேண்டும்.அல்லது அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் எனவும் கூறலாம்.விடுதலை என்பது நடந்திருக்கின்ற நல்ல விடயம் என்பதை உணர வேண்டும்.இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உரிமை கோருவதற்கு எந்தவித அருகதையும் கிடையாது.
ஏனெனில் இவர்கள் ஏற்கனவே பலம் வாய்ந்த ஆட்சி ஒன்றினை நிறுவியவர்கள்.ரணில் மைத்திரி ஆகியோரை இணைத்து நல்லாட்சியை நிறுவி இவர்கள் இல்லை என்றால் அந்த ஆட்சி இல்லை என்ற நிலை இருந்தது.இதில் எவரையும் மீட்டு தர அவர்களால் முடியவில்லை.இப்போது இந்த அரசாங்கம் இவர்களை விடுதலை செய்திருக்கின்றது.இதனை அரசியல் இலாபம் என்று கொச்சைப்படுத்துவதை விட அவர்கள் இலாபத்திற்காக தான் செய்கின்றார்கள் என நினைப்பதுடன் அதில் நாம் இலாபம் அடைந்துள்ளதாக பாராட்டுவோம் என்றார்.
0 comments :
Post a Comment