வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்



மாளிகைக்காடு நிருபர்-
சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டி பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு (2021.06.09) நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதி சட்டத்தரணியும், நீதி அமைச்சருமான அலி சப்ரி அவர்கள் குறித்த பொதியை மக்களுக்கு வழங்கி வைத்தார்.

கொவிட் 19 தொற்றுநோயை எதிர்கொண்டு சுகாதார வழிகாட்டுதல்களின்படி மெகொட கொலன்னாவ மற்றும் கோதத்துவ போபத்த ஆகிய இடங்களுக்கு பொருட்கள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. கொலன்னாவ மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகள் ஆண்டுக்கு பல முறை வெள்ளத்தை எதிர்கொண்டு வருவதால், கொலன்னாவ பிரதேச செயலாளருக்கு உரிய நிறுவனங்களால் அதிகபட்ச உதவி வழங்கப்பட்டு வருவதாகவும்,
கூடிய விரைவில் தாழ்வான பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கால்வாய்கள் மற்றும் வடிகான் அமைப்புகளை அகற்ற தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பெற்றோலிய வளங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ், நீதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் ஃபயாட் பாக்கீர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அசோக லங்காதிலக மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :