சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜ.எம்.கபீர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் இராணுவம் மற்றும் பொலிசாரின் ஒத்துழைப்புடன் அதிரடி சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
அதன்போது பயணத்தடையை மீறி செயற்பட்டவர்கள் எச்சரிக்கப்பட்டதோடு அன்ரிஜன் மற்றும் பிசிஆர் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.மேற்பார்வை பொதுச்சுகாதாரபரிசோதகர் எஸ்.எ.றாசிக் பொதுச்சுகாதாரப்பரிசோதகர் முருகேசு ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் இச்சோதனை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
அங்கு முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வியாபாரம் செய்த கடைகள் சீல் வைக்கப்பட்டதுடன் பிசிஆர் சோதனையும் செய்யப்பட்டது.
வீதியில் இருந்து வியாபாரம் செய்தவர்களின் அனுமதி இரத்து செய்யப்பட்டதுடன் பிசிஆர் சோதனையும் செய்யப்பட்டது.
முறையான காரணம் இல்லாது பயண தடையை மீறி பயணம் செய்தவர்கள் பிசிஆர் மற்றும் அன்ரிஜன் சோதனையும் செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment