கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் பிரயாணிளின் வருகை இல்லாததால், திருகோணமலை மாவட்டத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் உணவின்றி உணவுக்காக வீதிகளில் அலைந்து திரிகின்றன.
திருகோணமலை நகரில் அமைந்துள்ள மத்திய வீதி, என் சி வீதி மற்றும் அதனை அன்டிய குடியிருப்பு இடங்களில் மான் கூட்டங்கள் உணவுக்காக அலைந்து திரிகின்றதை கருத்திற்கொண்டு மான்களுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றது. பயணத்தடை காலங்களில் மான்களுக்கு உணவுகள் வழங்குவதற்கான வசதிகளை திருகோணமலை நகர சபையினால் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment