அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் விசேஷட கண்காணிப்பு நடவ்டிக்கை!



எம். என். எம். அப்ராஸ்-
ம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் சம்மாந்துறை பிரதேசத்தில் விசேஷட கண்காணிப்புடன் அறிவுறுத்தல் நடவ்டிக்கை இன்று (08) இடம்பெற்றது

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பயணத்தடையின் காரணமாக மக்களுக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்கள் பிரிவுகள் தோறும் நடமாடும் சேவை மூலம் வழங்குவதற்கு நடமாடும் வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்,நடமாடும் சேவை மூலம் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வோர் பொருட்களுக்கான விலையினை காட்சிப்படுத்தாது பொறிக்கப்பட்ட விலைக்கு மேலதிகமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதாக பொது மக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது .

இதையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல் . பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார பணிப்புரையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகளான இஷட்.எம் ஸாஜீத் மற்றும் எஸ்.எம் றஸ்லான் விசேஷட கண்காணிப்புடன் வியாபாரகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக குறித்த பகுதிக்கு கள விஜயம் செய்தனர் .

அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் நடமாடும் வியாபாரிகள் கட்டாயமாக விலைப்பட்டியல் இடுவதுடன் பொதி் செய்யப்படுகின்றபொருட்களுக்குகட்டாயம்உற்பத்தித்திகதி, காலவதித்திகதி,அளவு,நிறை,தொகுதி இலக்கம்,உற்பத்தியாளரின் விபரம்,அதிகூடிய சில்லறை விலை என்ற விபரங்களை உள்ளடக்க வேண்டும் என்பதும் நடமாடும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :