கல்முனை ஆதார வைத்தியசாலையில் முதலாவது கொவிட் மரணம்!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை ஆதாரவைத்தியசாலையில் முதலாவது கொவிட் மரணம் நேற்று இடம்பெற்றுள்ளது.

கல்முனையையடுத்துள்ள மணல்சேனையைச்சேர்ந்த 85வயதுடைய மூதாட்டி திருமதி எஸ்.பூமணி என்பவரே இவ்விதம் அங்கு மரணமானவர்.

அவர் தனக்கேற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக இறுதிநேரத்தில் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.அவருக்கு வாயிலில் அன்ரிஜன் செய்ததும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. உடனே அங்குள்ள கொவிட் சிகிச்சை அதிதிவீர பிரிவில் அனுமதித்தனர். அங்கு கொண்டுசென்று சோதனை செய்ய ஆரம்பித்ததும் அவரது உயிர் பிரிந்தது.
பின்னர் அவரிருந்த கட்டிலை சுத்தம்செய்து அம்புலன்ஸ் சுத்தமாக்கப்பட்டடு அம்பாறை பிரேத எரிப்புநிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறித்த கொவிட் சிகிச்சை பிரிவு 10கட்டில்களளுடன் திறம்பட இயங்கிவருவதும் அருகிலுள்ள மருதமுனை கொவிட் இடைத்தங்கல் நிலையத்தில் சடுதியாக சிகிச்சைக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்களை அனுமதித்து சுகதேகியாக்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரனம் இந்த முதலாவது மரணம் பற்றிக் கேட்டபோது

இதுவரை காலமும் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறவில்லை. பலர் நோய் முற்றும்வரை வீடுகளில் இருந்துவிட்டு இறுதிநேரத்தில் வருவதால் இத்தகைய துர்மரணங்கள் அநாவசியமாக ஏற்படுகின்றன. எனவே யாராவது குணங்குறிகள் தென்பட்டால் எந்தவயதுப்பிரிவினராகஇருந்தாலும் உடடியொக வைத்தியசாலையை நாடவேண்டியது கட்டாயமாகும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :