கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு, அவ்விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை (03) மாலை, கல்முனை மாநகர சபையில், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்ற வர்த்தகர்களுடனான விசேட கலந்துரையாடலின்போது பிரதேச செயலாளர்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபை புலனாய்வு உத்தியோகத்தர்களின் முன்னிலையில் அத்தியவசியப் பொருட்களுக்கான விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
நாளை வெள்ளிக்கிழமை (04) தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் மரக்கறி வகைகள், பலசரக்குப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியவசியப் பொருட்களுக்கான அதிகூடிய சில்லறை விலைகள் இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலையை விட அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது அறிவுறுத்திய மாநகர முதல்வர், அதற்கான பணிப்புரையையும் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு விடுத்துள்ளார்.
வியாபாரங்களின்போது கட்டாயம் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இலத்திரனியல் தராசு பாவிக்கப்பட்ட வேண்டும் எனவும் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது. இவற்றை உத்தராசீனம் செய்யும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களது வியாபார அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment