வர்த்தக தேவைக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை பிழையாக பயன்படுத்த வேண்டாம் : சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி.



நூருல் ஹுதா உமர்-
மீபகாலமாக உள்ளூர் வியாபாரிகளுக்கு அண்டிஜென் பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே அவர்களுக்கான வியாபரத்தினை குறிப்பிட்ட எல்லைக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வழங்குவதற்கு அனுமதியினையும் வழங்கியுள்ளோம் ஆனால் எமது பிரதேசத்தில் ஒரு சில வியாபாரிகள் தமக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்து இரவு நேரங்களில் சிலர் நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் இன்றிலிருந்து இரவு நேரங்களில் அவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் வைத்து நடமாடும் வியாபாரிகளுக்கு எதிராக சுகாதார துறையினரும் பாதுகாப்பு துறையினராலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

சாய்ந்தமருது பிரதேசத்தில் கொவிட்-19 கொரணா தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் எமது அலுவலக சுகாதார துறையினரும் இவர்களுடன் இணைந்து பாதுகாப்பு துறையினரும் அனைத்து நேரங்களிலும் கள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை அவதானித்து இருப்பீர்கள் எங்களது நடவடிக்கைகள் இறுக்கமானதாக இருந்தாலும் எங்களது பகுதிக்குள் தொற்றாளர் ஒருவர் கூட அடையாளம் காணப்படாமல் அனைவரும் சுகாதார நலன் உடையவர்களாக இருப்பதே எங்களது முதன்மையான நோக்கமாக இருக்கின்றது. என்பதனை தெரிவித்து கொள்கின்றேன்.

"கொரோணா என்பது தற்போது ஆட்கொள்ளியாக மாறி உள்ளது இதனை சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு துறையினர் இணைந்து தடுக்க முடியாது உங்களது ஒத்துழைப்பு தான் இதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :