காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வியாபாரிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கு முகமாக மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் சோதனையில் மாவடிப்பள்ளி வியாபாரி ஒருவருக்கு தொற்றுறுதி இனங்காணப்பட்டுள்ளது.
மொத்தமாக 26 வியாபாரிக்கான அண்டிஜென் பரிசோதனையின் போது மாவடிப்பள்ளி பிரதேசத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் மட்டும் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டதுடன் ஏனைய அனைத்து முடிவுகளும் நெகட்டிவாக வந்துள்ளது என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணனின் வேண்டுகோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு பொது சுகாதார பரிசோதகர் ஜமீல் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment