கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் வீடுகளில் இருந்து சுய வைத்தியம் செய்யாமல் வைத்தியசாலைகளுக்குச் செல்லுங்கள் - வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் அடையாளம் காணப்பட்டு வருவதாக வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் இதுவரை நான்கு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், மீராவோடை பிராந்தியத்தில் (20) ஆம் திகதி மாத்திரம் ஒரே வீதியில் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் அச்சம் கொள்ளாமல் உடனடியாக வைத்தியசாலைகளுக்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் இருந்து கொண்டு சுய வைத்தியம் செய்யாமல் தங்களுடைய உயிர்களை பாதுகாக்க அனைவரும் முறையான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்று சுகாதார வைத்திய அதிகாரி வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :