சவாலை ஏற்றோம்: நிறைவேற்றினோம்' என்கிறார் -சுரேன் ராகவன்



காரைதீவு சகா-
நாடாளுமன்றத்திலே ஒரு தமிழ் தேசியத்தலைவர் என சொல்லிக்கொள்பவர் அரசாங்கத்தையும் என்னையும் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு சவால்விடுத்தார். முடியுமானால் செய்துகாட்டுங்கள் என்றார். அந்த சவாலை நாங்கள் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியிருக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

இலங்கைத் தமிழ் அரசியலில் நேற்று ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. இப்போதாவது இது நடந்திருப்பதைக்குறித்து ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அதேபோல தமிழ் அரசியலைப்பற்றி கரிசனையடையவர்கள் சந்தோஷமடைய வேண்டியதுமாயிருக்கின்றது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் முழுடுமையாக 93 கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள். சாதாரணமாக ஒவ்வொரு பொசன் மற்றும் வெசாக் நாட்களில் இது நடைபெறும் விடயமாக இருந்தாலும் நேற்று நடந்த விடயத்திலிலுள்ள விசேட விடயம் என்னவென்றால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டிருந்த 16 பேர் விடுவிக்கப்பட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் எடுத்த இம்முயற்சி நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் விவாதிக்கப்பட்டது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தன்னுடைய வாழ்கையில் சிறையில் அனுபவித்த கண்ட கதைத்த தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வேதனையை உணர்ந்தவராக பிரேரணையை முன்வைத்தார். முதன்படி ஜனாதிபதிக்கும் நாமல் ராஜபக்ஷ அமைச்சருக்கும் நிதியமைச்சர் அலிசப்ரிக்கும் எனது நன்றிகளையும் தெரிவிக்கின்றேன்.

நீண்டகாலமாக சிறைகளில் பெற்றோர் பிள்ளைகளை இழந்து இருந்த அந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஒரே கூரைக்குள் இரவு உணவை அருந்தியிருப்பார்கள். அதன் பின்னணியில் இன்னுமொரு விடயம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நடந்துகொண்ட விதம் துக்ககரமாகவே இருந்தது.அவர்களது அடித்தளம் ஆட்டம் கண்டுவருகிறது. அவர்களையிட்டு நாம் அலட்டிக்கொள்ளப்போவதில்லை. அவர்களது அரசயில் அதுதான்.

எதுஎப்படியிருப்பினும் மீதமுள்ள தமிழ் அரசியல் கைதிகளைக்கூட மீளாய்வுசெய்து படிப்படியாக அவர்களை விடுவிக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :