யுத்தகாலத்தில் எல்லையில் கைதிகள் பரிமாற்றம் நிகழ்வதுபோன்று புதிய வளத்தாப்பிட்டி மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கல்!



வி.ரி.சகாதேவராஜா-
யுத்த காலத்தில் எல்லைப்பகுதியில்வைத்து கைதிகள் பரிமாற்றம் நிகழ்வதுபோன்று முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி மக்களுக்கான உலருணவு நிவாரணம் நேற்று வழங்கப்பட்டது.

முடக்கப்பட்ட அம்பாறையையடுத்தள்ள புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கென ஒரு தொகுதி உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார்.

நேற்று(8) இவ் உலருணவுப்பொதிகள் முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டி எல்லைப்பகுதியில் வைத்து சம்மாந்துறை பிரதேச செயலாளரின் பிரதிநிதியான அப்பகுதி கிராமசேவை உத்தியோகத்தர் எஸ்.ரவி முன்னிலையில் கையளிக்கப்பட்டது.

கிராமம் பூராக இராணுவத்தாலும் பொலிசாரினாலும் பலத்த காவலுக்குட்பட்;டு சகல விதிகளும் மறிக்கப்பட்டு யாரும் உள்ளே வெளியே நுழையாதவண்ணம் தடைசெய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 63பேருக்கு தொற்று ஏற்பட்டும் ஒருபெண்மணி மரணித்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாரியம்மன் ஆலய பிரதானவீதியில்வைத்து சமுக செயற்பாட்டாளர்கள் தமது உலருணவுப்பொதிகளை இறக்கி வைத்ததும் உள்ளிருந்து கிராமஅமைப்பின் தலைவர் வெ.ஜெயச்சந்திரன் தலைமையிலான கிராமமட்ட இளைஞர்குழுவினர் அவற்றை பிறிதொரு படி வாகனத்தில் ஏற்றி நன்றி தெரிவித்துச் சென்றதைக்காணமுடிந்தது.

வளத்தாப்பிட்டி கொவிட் 19 உறவுகள் கிராமஅமைப்பின் முக்கியஸ்தர் வெ.ஜெயச்சந்திரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இம் முதற்கட்ட நிவாரணத் தொகுதி வழங்கப்பட்டது. ஆயிஷா அறக்கட்டளை நிதிய அனுசரணையின்கீழ் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடநன்த 15நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட எமது கிராம மக்களுக்காக முதன்முதலில் சமுகசெயற்பாட்டாளர்களான தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உயிரைத் துச்சமென மதித்து காரைதீவிலிருந்து இங்குவந்து இவ்வுதவியை எமக்கு வழங்கிவைத்தமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்என தலைவர் வெ.ஜெயச்சந்திரன் அங்கு நன்றிகூறினார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :