காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் காரைதீவு உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளுடனுடான சுகாதார வைத்தியஅதிகாரியின் கொவிட் 19 தாக்கம் தொடர்பான கொரோணா அலையை கட்டுப்படுத்த விழிப்புணர்வுக்கலந்துரையாடலொன்று நேற்றுமாலை காரைதீவில் நடைபெற்றது.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இன்று காரைதீவு விபுலாநந்த கலாசார மண்டபத்தில் சுகாதார நெறிமுறைக்கிணங்க நடைபெற்றது.
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோணா அலையை கட்டுப்படுத்த எவ்வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பிலான காரைதீவு பிரதேச சபையினருடனான கலந்துரையாடல் நேற்று(16) காரைதீவு விபுலானந்த கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
காரைதீவு ப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பசீர் கொவிட் தொடர்பான பிரதேச நிலைமை பற்றி எடுத்துரைத்தார்.
உள்ளுராட்சிமன்ற ஊழியர்கள் ஒத்துழைக்கவேண்டும் மக்களுக்கு சுகாதாரசெயற்பாடு தொடர்பாக அறிவூட்டவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பிரதம பொதுச்சுகாதார பரிசோதகர் சா.வேல்முருகு இதுவரை நடைபெற்ற சுகாதார செயற்பாடு தொடர்பாக பூரணவிளக்கமளித்தார்.
கொரோனாவின் அலையிலிருந்து மக்களை பாதுகாக்க பிரதேச சபையினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர்...
இந்த கலந்துரையாடலின் போது கடந்த காலங்களில் நடைபெற்ற கொவிட் தடுப்பு செயற்பாடுகள் தொடர்பிலும்எதிர்வரும் காலங்களில் எவ்வாறு சிறப்பாக செயற்பட்டு தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எவ்வகையான முறையில் அண்டிஜன் பரிசோதனை நடைபெறுகிறதுஇ கொரோணா தொற்றாளரை எப்படி சுகாதார துறை கையாள்கிறது. பிழையான தகவல்களினால் சுகாதார துறை சார்ந்த ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள். மக்கள் மத்தியில் உள்ள தெளிவின்மைகள் தொடர்பிலும் இங்கு மேற்பார்வை பொதுச்சுகாதர பரிசோதகர் எஸ். வேல்முருகு தெளிவுபடுத்தினார்.
0 comments :
Post a Comment