"இலங்கையை ஒரு முழுமையான சேதனைப் பசளை கொண்ட விவசாய நாடாக மாற்றுவதற்கான முடிவு நாட்டை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மனிதாபிமான முடிவு என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்
சிலர் சொல்வது போன்று , அதற்கு அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லை. கிழக்கு மாகாணத்தில் செயற்கை பசளை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்கால திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (16) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விசேட உரையாற்றுகையில் மேற்கண்டவாறு அவர் கூறினார்.
இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தும் பேசுகையில்:-
"கிழக்கு மாகாணத்தில், கடந்த சில பருவங்களில் பெரும் சவால்களுக்கு மத்தியில் செயற்கைப் பசளை கொண்டு நெல் வளர்ப்பதில் நாங்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தோம்.
இந்த நாட்டை நஞ்சற்ற தீவாக மாற்ற கிழக்கு மாகாணத்திலிருந்து அந்த பயணத்தைத் தொடங்கினோம்.
இந்த இரசாயன உர பயங்கரவாதத்தை ஒழிக்க ஜனாதிபதி எடுத்த முடிவு மிகவும் மதிப்புமிக்கது. அது நம் வாழ்வில் நாம் அடைந்த வெற்றி. முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவடைந்தது,
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் இதயங்களை எங்களால் அடைய முடியவில்லை. முன்னையய நல்லாட்சி அரசாங்கத்தால் அந்த மக்களின் இதயங்கள் மேலும் சேதமடைந்தன.
இப்போது நாம் மீண்டும் அந்த இதயங்களை நெருங்க முடியும். இது எங்கள் மாகாண மக்களின் அபிலாஷைகளிலிருந்து தெளிவாகிறது.
மக்களின் இதயத்தில் இருப்பது ஒரு வளமான கிழக்கு தேவை
எனவே, அதிகாரிகள் என்ற வகையில், ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கையை வலுப்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். எனவும் ” ஆளுநர் கூறினார்.
குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கலாமதி பத்மராஜா மற்றும் மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி ஹூசைன் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment