ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் பூரண சுகம் பெற்று மீண்டும் தனது சேவையை தொடர பிரார்த்திக்கின்றோம் - எம்.பீ.எம்.ஜெளபர்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர் தவிசாளராக பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை கவலைகளும் சசுமைகளும் நிறைந்த காலப்பகுதியாக காணப்படுகிறது என்று ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் தெரவித்தார்.

கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் எமது பிரதேசத்தில் வீரியம் கொண்ட போது தவிசாளர் தன்னை இரவு பகல் பாராமல் இந்த சமூகத்துக்காக அர்ப்பணிப்போடு செயற்பட்டவர். இந்நிலையில் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் தொடக்கம் ஏனைய விடயங்களில் தன்னுடைய சகல வேலைகளையும் ஒதுக்கி விட்டு மிகவும் துணிச்சலுடன் இந்த மக்களுக்காக வேண்டி தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிக் கொண்டிருந்த தவிசாளர் பூரண சுகம் பெற்று மீண்டும் தனது சேவையை தொடர நாம் பிரார்த்திக்கின்றோம்.

அதேபோன்று, ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல்.அஹமட் அவர்களும் கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகிறார் அவருடைய சுகத்துக்காகவும் நாம் பிரார்த்திக்கின்றோம்.

இந்த தேசியத்தில் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் எமது பிரதேச சபை மிகவும் மும்முரமாகவும் அர்ப்பணிப்போடும் செயற்படுகின்றது.

அந்தவகையில், எங்களது பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் இந்த ஜனாஸா நல்லடக்கப் பணிகளை உள்ளச்சத்துடன் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளை எமது பிரதேசத்தில் சிறப்பாக செய்து முடிக்க அனைவருக்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பிரதேச சபை உறுப்பினர் எம்.பீ.எம்.ஜெளபர் வேண்டிக் கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :