எரிபொருள் விலை சர்ச்சை; அமைச்சர் இன்று விசேட அறிவிப்பு?



J.f.காமிலா பேகம்-
ரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று(13) ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இந்த விசேட அறிவிப்பை மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி மற்றும் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு மத்தியில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு எடுத்த முடிவிற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

விசேடமாக அவர் பிரத்தினித்துவம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இதுகுறித்து அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க அமைச்சர் எடுத்த முடிவை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :