கொவிட் -19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரபின் வழிகாட்டலிலும், பங்களிப்பிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபினால் ஆரம்பிக்கப்பட்ட அனர்த்த நிவாரண நிதியத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த நிவாரணம் வழங்கும் நடவடிக்கை செயற்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் கொவிட் 19 பெருந்தொற்றின் மூன்றாம் அலையில் பாதிக்கப்பட்டு அவதிப்படும் மிக வறிய குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றார்.
தேசிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸின் வேண்டுகோளுக்கு அமைவாக, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக முதலாம் கட்ட நிவாரணப் பொதிகள் இன்று (18) பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.நியாஸ், காரியால உத்தியோகத்தர் ஜஸ்வத் இலாஹி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இந்த நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
0 comments :
Post a Comment