தபால் திணைக்கள சேவைகள் அத்தியாவசிய சேவையாகிறது!



யணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் தபால் திணைக்கள சேவைகளை அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் கீழ் இயங்கும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முகவரிகளுக்கு பொருட்கள் மற்றும் கடிதங்களை பகிர்ந்தளிக்கும் சேவை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விரைவு தபால் சேவை, தபால் நிலையம் ஊடாக மருந்துகளை பகிர்ந்தளித்தல் மற்றும் பணப்பரிமாற்றல் என்பனவும் இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :