எதிர்க்கட்சி அரசியல் மனநிலையில் செயற்படாது யதார்த்தங்களின், பின்புலங்களுக்கேற்ப நடந்து கொள்ள வேண்டிய சமயோசித அரசியலை பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் முன்னெடுப்பது,சமூக அரசியலை ஆரோக்கியப்படுத்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
சாதனை அரசியலின் சாத்தியங்கள், கட்சிசார்பு மனநிலையில் இல்லை என்பதை, முஷர்ரப்பின் அண்மைக்கால தீர்மானங்களில் தென்பட்டுள்ளதையும், சமூக அவதானிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அண்மையில், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணல் மற்றும் இருபதாவது திருத்தம், இரட்டைப்பிரஜாவுரிமை,துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் என்பவற்றில்,முஷர்ரப் நடந்துகொண்ட முறைகளின் அடிப்படையிலே இவர்கள், இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளனர். பெரும்பான்மையினத்தின் விழிப்பு, தெளிவுகளால் நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்பட்டுள்ளது.இந்தக் கலாசாரம் ஏனைய கலாசாரங்களைப் புறந்தள்ளுவது, நாட்டின் பன்முகத்தன் மைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
இந்த ஆபத்தின் விடுதலை சமயோசித அரசியலில்தானுள்ளது. தென்னிலங்கை சித்தாந்தம் நாட்டை ஆளும்வரைக்கும் சிறுபான்மைச் சமூகங்களின் பேரம்பேசும் பலம், பலவீனமடையவே செய்யும். இதனால்தான் சமயோசிதம் அவசியப்பட்டு, கட்சிசார் சிந்தனைகளைப்பின்
தள்ளுகிறது. பேரம்பேசும் அரசியலை பலவீனப்படுத்தும் தேசிய அரசியலுக்கு முன்னால்,சமயோசித அரசியலைக் கையாள வேண்டியும் ஏற்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீனால், கையாளப்படுவதும் இந்த சமயோசிதம்தான். எதை, ஆதரித்தால் சமூகத்துக்கு நன்மை,எந்தச் சட்ட மூலம் சமூகத்தைப் பாதிக்காது என்பதைப் பொறுத்துத்தான்,தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர,எதிர்க்கட்சி அரசியல் மனநிலையில் எல்லாவற்றையும் நோக்கக் கூடாது.
சில சட்டமூலங்களை கட்சி நலனுக்கு அப்பால், பிரதேச நலன்களுக்காகவாவது ஆதரிக்க வேண்டியளவுக்கு, தேசிய அரசியலின், பிடிகள் பிராந்திய அரசியலைச் சுற்றி வளைக்கின்றன. அவரது பொத்துவில் பிரதேசமும் இவ்வாறான பிடிக்குள் இறுகியுள்ளதால்,இதிலிருந்து விடுபடும் தேசிய அரசியலின் தேவைப்பாடுகள் முஷர்ரப்பை ஆட்கொண்டுள்ளதாகவே தெரிகிறது.தேசிய அரசியலை தீர்மானிக்கும் சிறுபான்மையினரின் பலம், செல்லாக்காசாகியுள்ள காலமிது. கட்சிதாவி,கதிரைமாறி அமர்வதால், சிலதை சாதிக்க சிறுபான்மைச் சமூகங்கள் துணியலாம்.இவ்வாறு துணிவது பேரினவாதத்தை விழிப் பூட்டுவதுடன், எதிர்ப்பது அவர்களை ஆத்திரமூட்டவும் செய்கிறது.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில்தான், சமயோசிதம் அவசியப்படுகிறது. அதிகாரங்களில் நிலைப்பதற்காகச் சிலரும், அவர்களை ஒழிப்பதற்காகச் சிலரும் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.
இவற்றில், நாட்டுக்கு நன்மையானவை எவை? சமூகத்துக்கு எதிரானவை எவை? நாட்டுக்கு நன்மையானது சமூகத்துக்கு எதிராகுமா?சமூகத்துக்கு எதிரானது நாட்டுக்கு நன்மையானதா?என்றெல்லாம் ஆராய்கையில்,சமூகம் என்ற சிந்தனை குறுகி,பிராந்திய நலனென்ற வட்டத்துக்குள் வரத்தான் நேரிடும். இரட்டைப்பிரஜாவுரிமை என்பது, முஸ்லிம் சமூகத்துக்கோ?அல்லது முஷர்ரப்பின் பொத்துவில் பிராந்தியத் துக்கோ எதிரானதல்ல. இதை ஆதரித்ததால், சில சுற்றிவளைப்புக்களிலிருந்து அவரது பொத்துவில் பிராந்தியத்தை மீட்க முடியுமென்ற நம்பிக்கைதான், சிலதீர்மா னங்களை எடுக்க வைத்திருக்கலாம். எனவே,சமயோசிதமே நமக்குள்ள வழிகளாகியுள்ளன.
தேசிய அரசியலின் இன்றைய பலத்தால் வந்த வினைதான், சிலவேளைகளில், கட்சிக்குள் சிலரைத் தனித்தனியாகச் சிந்திக்கச் செய்கின்றன.இந்தச் சங்கடங்களுக்குள் சிக்கியும் சிலவற்றைத் தீர்மானிக்க நேரிடுகிறது. இதற்காக தலைமையை தனிமைப்படுத்தியதாகவோ? அல்லது கட்சியைக் கைவிட்டதாகவோ எவரும் விளக்கம் வழங்கவோ?அல்லது விசாரணைக்கு அழைக்கவோ முடியாது. அவ்வாறு, அழைப்போர் யாராக இருந்தாலும், அவர்களிடம் தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகத்தான் கருதுவேண்டியும் உள்ளது. இவர்களால், அடையமுடியாமல் போன ஆசனங்களில்,முஷர்ரப் அமர்ந்துவிட்ட காழ்ப்புணர்ச்சிகளும், இவர்களை இவ்வாறு காரியமாற்றத் தூண்டியிருக்கலாம்.
கட்சியிலிருந்து முஷர்ரப்பை தனிமைப் படுத்துவதற்காக, இவ்வாறனவர்கள்,அவரது பிரதேசத்தின் தனிப்பட்ட அபிலாஷைக ளையும், தலைவர் மீதான முஷர்ரப்பின் அபிமானத்தையுமே,தூக்கிப்பிடிக்கின்றனர். அநியாயமாக அடைக்கப்படுள்ள நமது கட்சியின் தலைவரை, விடுவிக்குமாறு பாராளுமன்றத்தில் பல தடவைகள் குரல் எழுப்பியுள்ள முஷர்ரப் ,நமது தலைவர் விடுதலையாகும் வரையும் குரல் எழுப்புவார் என்பதுதான் எமது நம்பிக்கை.நமது, தலைவரின் கைதைக் கண்டித்து கறுப்புக்கொடி கட்டுமாறு கூறியதும், தலைமைக்கான முஷர்ரப்பின் விசுவாசம்தான்.
புனிதநாளிலா போர்க்கொடி எனச்சிலர் அவரை விமர்சிக்கலாம். கொடியைக் கட்டாவிடினும் சிலர் கையேந்திப் பிரார்த்திக்கும் மனநிலையையாவது, இந்த அறிவிப்பு ஏற்படுத்தியிருக்கிறதே! இந்த யதார்த்தத்தையும் கட்சியிலிருந்து முஷர்ரப்பைக் கருவறுக்கப் புறப்பட்டுள்ளோர் கண்டுகொள்ள வேண்டுமெனவும் சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment