உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாக அமைய வேண்டாம் - வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

கடந்த 4 ஆம் திகதி குறித்த பகுதியில் 52 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த பகுதியில் கொரோனா தொற்று காரணமாக ஒரு மரணமும் பதிவாகியுள்ளது.

ஆகவே, தேவையின்றி வீதிகளில் அலைந்து திரிந்து வீட்டிலுள்ள முதியோருக்கும் சிறியவர்களுக்கும் கொரோனா தொற்றை கொடுத்து உங்கள் குடும்ப அங்கத்தவர்களின் மரணங்களுக்கு நீங்களே காரணமாக அமைய வேண்டாம்.

அரசாங்கம் பிறப்பித்துள்ள சட்டதிட்டங்களை மதித்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்று வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :